உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்தடையை கண்டித்து ஓட்டேரியில் மறியல்

மின்தடையை கண்டித்து ஓட்டேரியில் மறியல்

ஓட்டேரி, செப். 20--– மின்தடையை கண்டித்து ஓட்டேரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓட்டேரி, பிரிக்ளின் சாலை 3 மற்றும் 4வது திரு.வி.க.தெரு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரியத்திடம் மக்கள் புகார் அளித்தும் மின் தடை தொடர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் பிரிக்ளின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார், மக்களை சமாதானப்படுத்தி, மின்தடையை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர், பின் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை