வீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
பாரிமுனை: அம்பத்துாரில், ஓராண்டாக வீடு வழங்காததால், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பத்துார், கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரில், 55க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஏரிக்கு சொந்தமான இடம் என்பதால், கடந்த 2024ல் அங்கு குடியிருந்த மக்களிடம் மாற்று இடம் வழங்குவதாக கூறி, மாநகராட்சியினர் அப்புறப்படுத்தினர். அதன்பின் ஓராண்டாக அவர்களுக்கு இடம் வழங்காததால், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் சக்திவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், வீடு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.