மேலும் செய்திகள்
இரு டூ - வீலர்கள் மோதல் திருத்தணி ஏட்டு படுகாயம்
06-Aug-2025
ஓட்டேரி மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தபால் ஊழியர், சிகிச்சை பலனின்றி இறந்தார். ஓட்டேரி, கிருஷ்ணதாஸ் சாலையில் சொந்த வீட்டில் வசித்தவர் வெங்கடேசன், 56; வியாசர்பாடி தபால் அலுவலக ஊழியர். இம்மாதம் 12ல், வீட்டின் முதல் தளத்தில் இருந்து மது போதையில் இறங்கி வந்தபோது படிகட்டுகளில் தவறி விழுந்தார். காயமடைந்த நிலையில், 13ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்து துாங்கியுள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் இவரது மனைவி, 14ம் தேதி வீட்டுக்கு வந்தபோது, வெங்கடேசன் படுக்கையிலேயே கிடந்துள்ளார். இதையடுத்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெங்கடேசன், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Aug-2025