மேலும் செய்திகள்
பயணிக்க லாயகற்ற சாலை வாகன ஓட்டிகள் அவதி
26-May-2025
எம்.ஜி.ஆர்.நகர், குன்றத்துார் அடுத்த கோவூரைச் சேர்ந்தவர் பிரதாப் குமார், 28; பழைய குற்றவாளி. இவர், 21ம் தேதி இரவு எம்.ஜி.ஆர்.நகர், கோவிந்தசாமி தெருவில் உள்ள தள்ளுவண்டி கடையில் நண்பர்களுடன் உணவருந்தினார்.அப்போது, விஹால் என்பவர் தள்ளுவண்டி கடை உரிமையாளரிடம் தகராறு செய்தார். இருவரையும், பிரதாப் குமார் சமாதானம் செய்தார். அப்போது, பிரதாப் குமாருக்கும் விஹாலுக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும், அங்கிருந்து பிரிந்து சென்றனர். தொடர்ந்து, குறிஞ்சி தெருவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பிரதாப் குமாரை, விஹால் உட்பட ஆறு பேர் சரமாரியாக வெட்டி, தப்பி சென்றனர்.இது குறித்து விசாரித்த எம்.ஜி.ஆர்.நகர் போலீசார், கே.கே.நகர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த தனுஷ், 22, கணேஷ், 27, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.
26-May-2025