உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது போதையில் வடமாநிலத்தவர் மோதல்: நால்வர் காயம்

பொது போதையில் வடமாநிலத்தவர் மோதல்: நால்வர் காயம்

செங்குன்றம்:செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள வடமாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், செங்குன்றம் அடுத்த அரிசி ஆலையில் பணியாற்றிய வருகின்றனர். நேற்று முன்தினம் ஆயுத பூஜை என்பதால் அனைவரும் மது அருந்தியுள்ளனர். திடீரென போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் இதில் விமா லேசிக், 33, கமலேஷ், 28, விஜி இன், 23, நித்தீஷ் லால், 31 ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நான்கு பேரையும் மீட்டு செங்குன்றம் அடுத்த நல்லுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரோகித்குமார், 19, மனிஷ் குமார், 20, உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ