உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது மருத்துவ முகாம் 500 பேருக்கு சிகிச்சை

பொது மருத்துவ முகாம் 500 பேருக்கு சிகிச்சை

சென்னை:சென்னைவாழ் ரெட்டியபட்டி நாடார் உறவின்முறை சங்கம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து, திருவான்மியூரில் நேற்று மருத்துவ முகாமை நடத்தின.பொது மருத்துவம், குழந்தை - மகளிர் நலன், தோல், காது மூக்கு தொண்டை, மகப்பேறு, எலும்பு மூட்டு, இதயம், நுரையீரல், பல், கண் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, இலவச மருத்துவ ஆலோசனை, பரிசோதனை நடந்தது.அடிப்படை ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், இ.சி.ஜி., எக்கோ, எலும்பு அடர்த்தி, நரம்பு செயல்திறன் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டன.சில பாதிப்புகளுக்கு, இலவசமாக மருந்து வழங்கப்பட்டது. கண் பரிசோதனை செய்து உடனே கண்ணாடி வழங்கப்பட்டது.முகாம் ஒருங்கிணைப்பாளர் சிவராஜுக்கு, தொழிலதிபர் மயிலை சீனிவாசன் மற்றும் சென்னைவாழ் ரெட்டியபட்டி நாடார் உறவின்முறை சங்கத்தினர் இணைந்து, நினைவு பரிசு வழங்கி கவுவித்தனர். அதேபோல், மருத்துவர்கள், ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.இந்த முகாமில், 500 பேர் பங்கேற்றனர். இதில், சிலருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 200 பேருக்கு, தலா 600 ரூபாய் மதிப்புள்ள மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. கண்புரை அறுவை சிகிச்சைக்கு 31 பேர் தேர்வாகினர். அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ