ரூ.23 லட்சம் மோசடி வாலிபருக்கு காப்பு
வேளச்சேரி, ஏப். 23-நங்கநல்லுாரை சேர்ந்தவர் சங்கரராமன், 48. இவருக்கு, வேளச்சேரி, பஜனை கோவில் தெருவை சேர்ந்த பிரவீன்சுந்தர், 27, என்பவர், ஓராண்டுக்கு முன் அறிமுகமானார். பிரவீன்சுந்தர் கம்யூட்டர் கடை நடத்தி வருகிறார்.தொழிலில் பார்ட்னராக சேர்த்துக் கொள்வதாகக் கூறி, பிரவீன்சுந்தரும், அவரின் காதலி ஆர்த்தியும், சங்கரராமனிடம் சிறுகச்சிறுக, 23 லட்சம் ரூபாய் வாங்கினர்.பின், பார்ட்னராகவும் சேர்க்கவில்லை; பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில், பணம் தரம் முடியாது என, அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் நேற்று பிரவீன்சுந்தரை கைது செய்தனர். தலைமறைவான ஆர்த்தியை தேடி வருகின்றனர்.