மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
29-Mar-2025
விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
28-Mar-2025
ஜெ.ஜெ., நகர், பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாலகுரு, 40. சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலம், 88வது வார்டில், சுகாதார ஆய்வாளராக பணியாற்றுகிறார்.இவர், ஜெ.ஜெ., நகர், கலைவாணர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து, ஊழியர்களுடன் சென்று, கடந்த 12ம் தேதி சோதனையில் ஈடுபட்டுள்ளார்.அப்போது, தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்து வந்த, பாடி, கலைவாணர் நகரை சேர்ந்த பூங்காவனம், 40, என்பவர், பிளாஸ்டிக் பை பயன்படுத்தி வந்தது தெரிந்தது.அதனால், அவருக்கு சுகாதார ஆய்வாளர் பாலகுரு, 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூங்காவனம், சுகாதார ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை கையால் தாக்கியுள்ளார்.மேலும், கடையில் இருந்த கத்தியை எடுத்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து, ஜெ.ஜெ., நகர் காவல் நிலையத்தில், பாலகுரு அளித்த புகாரின்படி, போலீசார் பூங்காவனத்தை அழைத்து விசாரித்தனர்.பின், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கையால் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, பூங்காவனத்தை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.
29-Mar-2025
28-Mar-2025