உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்வி உதவிதொகை பெற விநாடி - வினா போட்டி

கல்வி உதவிதொகை பெற விநாடி - வினா போட்டி

சென்னை, அஞ்சல் துறை சார்பில், மாணவ - மாணவியருக்கான வழங்கப்படும், 6,000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கான விநாடி - வினா போட்டி, செப்., 20ல் நடக்கும் என, சென்னை அஞ்சல் வட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அஞ்சல் வட்டம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை அஞ்சல் வட்டம் சார்பில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கான, அஞ்சல் தலை குறித்த விநாடி -- வினா போட்டி, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான, மண்டல அளவில் எழுத்து வடிவிலான விநாடி -- வினா போட்டி, செப்., 20ல் நடக்க உள்ளது. இதில், பங்கேற்கும் மாணவ, மாணவியரின் பள்ளிகளில், அஞ்சல் தலை சேகரிப்பு மையம் இருக்க வேண்டும். அதில், மாணவ - மாணவியர் உறுப்பினராக இருப்பது அவசியம். இல்லையேல், சுய அஞ்சல் வைப்பு கணக்கு வைத்திருந்தால் கருத்தில் கொள்ளப்படும். போட்டியில் தேர்வாகும் மாணவ - மாணவியர், இறுதி போட்டிக்காக, அஞ்சல் தலை செயல்முறையை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.tamilnadupost.cept.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 25ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி