உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழைய உதிரி பொருட்களில் தயாரான ரயில் இன்ஜின், ராக்கெட் கண்காட்சி

பழைய உதிரி பொருட்களில் தயாரான ரயில் இன்ஜின், ராக்கெட் கண்காட்சி

சென்னை:பழைய உதிரி பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரி ரயில் இன்ஜின் உட்பட பல்வேறு படைப்புகளின் கண்காட்சி, சென்ட்ரல் அருகே திறக்கப்பட்டுள்ளது. Galleryதெற்கு ரயில்வேயில் துாய்மை இந்தியா பிரசாரம், கடந்த 17ம் தேதி தொடங்கியது; அக்., 2 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே பணிமனைகளில் பணியாற்றும் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், 2,665 கிலே பழைய உதிரி, கழிவு பொருட்களை பயன்படுத்தி, கலை படைப்புகளாக மாற்றியுள்ளனர். இந்த கலைப் படைப்புகளின் கண்காட்சி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மூன்று நாட்களுக்கு இந்த கண்காட்சி இருக்கும். இந்த கண்காட்சியில், கார்கில் விஜய் திவாஸை நினைவு கூரும் வகையில், இந்திய படைவீரர் தேசியக் கொடியை ஏந்துவது போன்ற சிற்பம், 750 கிலோ எடையில் தயாராகி உள்ளது. சிறிய ரக இன்ஜின் மற்றும் மரத்தின் மாதிரி மற்றும் இஸ்ரோ மாதிரி ராக்கெட் மாதிரி உள்ளிட்டவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ