உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முன்பதிவு அறை ஒதுக்காத ரயில்வே ரூ.1.40 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

முன்பதிவு அறை ஒதுக்காத ரயில்வே ரூ.1.40 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

சென்னை, சென்னை ராயபுரத்தை சேர்ந்த கலைசேகரன் தனியாகவும்; சென்னை, கடலுாரை சேர்ந்த எட்டு பேர், தலா இருவராக இணைந்து, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தனர். அதன் விபரம்:கடந்த 2019ல் டில்லி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றோம். பயணத்தின் போது, நிஜாமுதீன், அமிர்தசரஸ், சண்டிகர் ஆகிய மூன்று ரயில் நிலைய ஓய்வறைகளில் தங்கி கொள்ள, முன்பதிவு செய்திருந்தோம். நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்றபோது, ஓய்வறை முன்பதிவு தொடர்பாக கணினியில் எந்த பதிவும் இல்லை என்று கூறி, அறையை ஒதுக்க மறுத்தனர்; பிளாட்பாரத்தில் ஓய்வெடுத்தோம். சேவை குறைபாடுடன் நடந்த ரயில்வே நிர்வாகம், அறை கட்டணம், 1,838 ரூபாய், இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவாக, 25,000 ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.இம்மனுக்கள் மீதான விசாரணை, ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர் வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நடந்தது.'ஏதேனும் ஒரு காரணத்தால் ஓய்வறை ஒதுக்க முடியாமல் போனால், அதற்கான தொகையை திரும்ப வழங்க விதி உள்ளது. அதன்படி தொகை திரும்ப வழங்கப்பட்டள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கோரப்பட்டது என, தெற்கு ரயில்வே தரப்பில் கோரப்பட்டது.பின், அமர்வு பிறப்பித்த உத்தரவு:முன்கூட்டியே பதிவு செய்திருந்தும், ஓய்வறை ஒதுக்கப்படாதததால், மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த செயல் சேவை குறைபாடு மட்டுமல்ல; புகார்தாரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.எனவே, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர், வழக்கு தொடர்ந்த நபர்களுக்கு மொத்தம் 1.40 லட்சம் ரூபாய் இரண்டு மாதத்துக்குள் இழப்பீட்டை வழங்காவிட்டால், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை