உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கே.கே.நகர் அம்மன் கோவிலுக்கு ரூ.33 லட்சத்தில் ராஜகோபுரம்

கே.கே.நகர் அம்மன் கோவிலுக்கு ரூ.33 லட்சத்தில் ராஜகோபுரம்

சென்னைசென்னை, கே.கே.நகர், முத்து மாரியம்மன் கோவிலுக்கு, 33 லட்சம் ரூபாயில் புதிய ராஜகோபுர திருப்பணிக்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.சென்னை, கே.கே.நகரில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில், 50 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு, 2009ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது, திருப்பணி நடத்தி, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக, 33 லட்சம் ரூபாயில் புதிய ராஜகோபுரம், 25 லட்சம் ரூபாயில் மூலவர் சன்னிதி மற்றும் விமானம் அமைக்கும் பணி, 25.50 லட்சம் ரூபாயில் மகா மண்டபம் கட்டும் பணி என, 83 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் அக்கோவிலின் ராஜகோபுரம் கட்டும் பணிக்கு அமைச்சர் சேகர்பாபு நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, விருகம்பாக்கம், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகர் ராஜா, வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேசன், கோவில் அறங்காவலரும் லண்டன் கிரைடன் துணை மேயருமான தாமோதரன் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை