உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் சில்மிஷம் ரேபிடோ ஓட்டுநர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் ரேபிடோ ஓட்டுநர் கைது

வானகரம்: 'ரேபிடோ' பைக் டாக்சியில் பயணித்த பெண்ணிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மதுரவாயலில் வசிக்கும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண். பள்ளிக்கரணையில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு செல்ல, நேற்று முன்தினம் இரவு 'ரேபிடோ' பைக் டாக்சி புக் செய்துள்ளார். அங்கு வந்த வாலிபர், தன் பைக்கில் அப்பெண்ணை பள்ளிக்கரணை அழைத்து சென்றார். அங்கு சென்ற பின், சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் மதுரவாயலுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். காத்திருந்த பைக் ஓட்டுநர், அங்கிருந்து மீண்டும் மதுரவாயலுக்கு புறப்பட்டார். வரும் வழியில், போரூர் சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அப்பெண், தன் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இதையடுத்து, அந்த நபரிடம் நைசாக பேசி, மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். அங்கு காத்திருந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, வானகரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரித்த போலீசார், 'ரேபிடோ' பைக் டாக்சி ஓட்டுநரான அடையாறைச் சேர்ந்த சிவகுமார், 22, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ