உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரிய வகை கூரை கத்தாழை மீன் காசிமேடில் ரூ.28 லட்சத்திற்கு ஏலம்

அரிய வகை கூரை கத்தாழை மீன் காசிமேடில் ரூ.28 லட்சத்திற்கு ஏலம்

காசிமேடு:காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், அரிய வகை கூரை கத்தாழை மீன் 28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகுகளில், 50க்கும் மேற்பட்டவை நேற்று கரை திரும்பின. குறைந்த அளவு மீன் வரத்து இருந்ததாலும், மக்கள் கூட்டத்தாலும் சந்தையில், மீன் விலை உயர்ந்து காணப்பட்டது.இதில், ஏழு மீனவர்களுடன் கடலுக்க சென்ற தேவராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதிக மருத்துவ குணங்கள் கொண்ட அரிய வகை கூரை கத்தாழை மீன் சிக்கின.இவற்றின் எடை 1,070 கிலோ. அரிதாக மீனவர்கள் வலையில் சிக்கும் இந்த கூரை கத்தாழை மீன், ஒரு கிலோ 10,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.கூரை கத்தாழை மீன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மீனின் அடி வயிற்றில், 50 கிராம் முதல் 100 கிராம் வரை, 'நெட்டி' என்ற காற்றுப்பை இருக்கும்.இந்த நெட்டி, ஒயின், மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருள்களாக பயன்படுத்தப்படுகிறது. இதய நோய், பக்கவாதம், ஆண்மை குறைவுக்கும், இந்த நெட்டி மூலம் மருந்து தயாரிக்கப்படுகிறது. கத்தாழை மீனின் நெட்டிக்காக தான் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. காசிமேடில், நேற்று விற்பனைக்கு வந்த கூரை கத்தாழை மீனை, வியாபாரிகள் ஒன்று சேர்ந்து விலை கேட்டதால், 28 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதாக மீனவர்கள் தெரிவித்தனர்.மீன் விலை நிலவரம்மீன் வகை கிலோ (ரூ.)வஞ்சிரம் 900 - 1,000வெள்ளை வவ்வால் 1,100கறுப்பு வவ்வால் 500 - 600பாறை 400 - 500சங்கரா 500 - 600சீலா 500 - 550கிளிச்சை 100நெத்திலி 100 - 200கானங்கத்த 100 - 150நண்டு 300 - 400இறால் 300 - 400டைகர் இறால் 1,000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ