உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 25ல் ரேஷன் குறைதீர் முகாம்

25ல் ரேஷன் குறைதீர் முகாம்

சென்னை, உணவு வழங்கல் துறை சார்பில், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில், வரும் 25ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் போன் எண் மாற்றம் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும், ரேஷன் கடை செயல்பாடு, தனியார் அங்காடியில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவை குறைபாடு தொடர்பாக, அதிகாரிகளிடம் மக்கள் புகார் தரலாம். எனவே, இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு ரேஷன் கார்டுதாரர்களை, அரசு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ