உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரவீஸ்வரர் கோவில் உயர்த்தும் பணி நிறைவு

 ரவீஸ்வரர் கோவில் உயர்த்தும் பணி நிறைவு

வியாசர்பாடி: வியாசர்பாடியில், 800 ஆண்டுகள் பழமையான ரவீஸ்வரர் கோவில், அறநிலையத் துறை கீழ் உள்ளது. சூரிய கதிர் ராஜகோபுரம் வழியாக, நேரடியாக நந்தி மற்றும் மூலவர் சிவலிங்கத்தின் மீது விழும். சில ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடக்கவில்லை. கோவில் தரைதளத்தில் இருந்து 5 அடிக்கு பள்ளத்தில் இருப்பதால் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழவில்லை என்பது தெரிந் தது. அதனால், கோவிலை தரை மட்டத்திலிருந்து உயர்த்துவது, மூலவர், அம்மன் மகா மண்டபம், நந்தி கொடிமரம், சண்டிகேஸ்வரர் ராஜகோபுரம் ஆகியவற்றை 8.6 அடி உயரம் உயர்த்த முடிவானது. 3 கோடி ரூபாய் செலவில், 2024, ஜூலை, 27ல் பணி துவங்கியது. நவீன தொழில் நுட்பமான ஜாக்கி உதவியுடன் கோவிலை உயர்த்தும் பணி நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. பிப்., 22ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ