உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீட்கப்பட்ட ரூ.70 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு 

மீட்கப்பட்ட ரூ.70 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு 

ஆவடி, 'ஆன்லைன்' மோசடி புகார்களில், பாதிக்கப்பட்டவர்கள் இழந்த 70 லட்சம் ரூபாயை, கமிஷனர் சங்கர் உரியவர்களிடம் வழங்கினார். ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பங்குச் சந்தை, பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளிட்ட 'ஆன்லைன்' மோசடி தொடர்பான புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதம் ஆறு வழக்குகளில் 11 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், ஜூலை மாதம் முதல் ஆக., 5ம் தேதி வரை, 'ஆன்லைன்' மோசடி தொடர்பாக, 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரித்த போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய வங்கி பரிவர்த்தனைகள் கொண்டு, சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்கை முடக்கினர். மோசடி நபர்களின் வங்கி கணக்கில் இருந்து மீட்ட 70 லட்சம் ரூபாயை, ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில், உரியவர்களிடம் கமிஷனர் சங்கர் நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ