ரூ.1.67 கோடி கோவில் சொத்து மீட்பு
சென்னை, ஹிந்து அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடக்கின்றன.அந்த வகையில், தேனாம்பேட்டை, பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக, எல்டாம்ஸ் சாலையில், 1,738 சதுர அடி மனையில் வணிகவளாகம் கட்டப்பட்டுள்ளது.இதில், ஒன்பது கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர். இதையடுத்து, அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்பட்டனர்.அறநிலையத்துறை சட்டப் பிரிவு - 78ன் கீழ், சென்னை மண்டலம்- -2 இணைக் கமிஷனர் நீதிமன்ற உத்தரவின்படி, உதவிக் கமிஷனர் பாரதிராஜா தலைமையில் போலீசாரின் உதவியுடன் அந்த கடைகளுக்கு, பூட்டி 'சீல்3 வைக்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 1.67 கோடி ரூபாய்.