உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவொற்றியூர் ஆதிசேஷ குளத்தில் பாசி, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

திருவொற்றியூர் ஆதிசேஷ குளத்தில் பாசி, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

திருவொற்றியூர்:திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. கோவில் வெளியே, 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ஆதிஷேச தீர்த்த குளம் உள்ளது. சமீபமாக பெய்து வரும் கனமழைக்கு, குளத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கி ரம்மியாக காட்சியளித்தது.இதனிடையே, குளத்தில் பாசி, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மண்டல குழு தலைவர் தனியரசு, 30க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மூலம், பாசி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை, நேற்று மதியம் மேற்கொண்டார்.தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தைப்பூசம் தெப்போற்சவத்திற்கு ஏற்றபடி, குளம் முழுதும் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ