ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கோயம்பேடு,கோயம்பேடு, காளியம்மன் கோவில் தெரு மற்றும் நெற்குன்றம் பகுதியை இணைப்பது, கோயம்பேடு சந்தை 'ஏ' சாலை. இந்த சாலையை ஆக்கிரமித்து, தள்ளுவண்டி கடைகள் அதிகளவில் முளைத்தன. தவிர, 'குடி'மகன்களால், திறந்தவெளி மதுக்கூடமாகவும் இச்சாலை மாறியது. இதனால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கோயம்பேடு சந்தையை நிர்வாகிக்கும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள், சாலையை ஆக்கிரமித்த தள்ளுவண்டி கடைகளை நேற்று அகற்றினர்.