உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.119.12 கோடியில் 41 குளம் சீரமைப்பு

ரூ.119.12 கோடியில் 41 குளம் சீரமைப்பு

சென்னை, 'சென்னையில், 119.12 கோடி ரூபாய் மதிப்பில், 41 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்கத்தை தவிர்த்து, மழைநீர் சேகரிக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, புதிய குளங்கள் உருவாக்குதல், நீர்நிலைகளை சீரமைத்து மேம்படுத்துதல், மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் மேம்பாட்டு பணி நடந்து வருகின்றன.மாநகராட்சியில் பகுதிகளில் ஏரிகள், குளங்களை மறுசீரமைப்பது, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பை தவிர்க்கவும், 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், 119.12 கோடி ரூபாய் மதிப்பில், 41 குளங்களில் புனரமைப்பு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி