உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் பாதையில் பழுது 3 விரைவு ரயில் தாமதம்

மின் பாதையில் பழுது 3 விரைவு ரயில் தாமதம்

சென்னை சென்னை அடுத்துள்ள தாம்பரம் ரயில் முனையத்தில், ரயில்களுக்கு மின் வினியோகம் செய்யும் மின் பாதையில், நேற்று மதியம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே மின் பொறியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலின்படி, அங்கு விரைந்து வந்து, உயர்நிலை மின்பாதையில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் போராடி, உயர்நிலை மின்பாதையில் ஏற்பட்ட கோளாறை பொறியாளர்கள் சரிசெய்தனர். இதனால், சென்னை எழும்பூர் -- காரைக்குடிக்கு இயக்கப்படும் 'பல்லவன்' விரைவு ரயில், 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை எழும்பூர் -- திருச்செந்துாருக்கு இயக்கப்படும் விரைவு ரயில், 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுபோல, சென்னை எழும்பூர் -- திருநெல்வேலி 'வந்தே பாரத்' ரயிலும், தாம்பரத்தில் இருந்து 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !