உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வில்லிவாக்கம் சிட்கோ நகருக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

வில்லிவாக்கம் சிட்கோ நகருக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், சிட்கோ நகருக்குள் மீண்டும் பேருந்து இயக்கவும், புதிதாக சிற்றுந்து இயக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது. அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் சிட்கோ நகரில், பிரதான சாலை உட்பட 100க்கும் மேற்பட்ட தெருக்களில், ஆயிரக்கணக்கானோர் குடியிருக்கின்றனர். இப்பகுதி உருவான போது, சிட்கோ நகருக்கு தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தடம் எண்கள் '71சி, 20டி' ஆகிய இரு பேருந்துகள், வில்லிவாக்கத்தில் இருந்து தலைமை செயலகம் மற்றும் பிராட்வே பகுதிக்கு இயக்கப்பட்டன. நாளடைவில் பேருந்து நிறுத்தமாக மாறி, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அப்பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், சிட்கோ நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணியால் சாலை சேதமடைந்ததை காரணம் காட்டி, மாநகர பேருந்துகள் சிட்கோ நகருக்குள் பல மாதங்களாக இயக்குவதில்லை. அதற்கு பதில், எம்.டி.எச்., சாலையிலேயே பேருந்துகள் நின்று செல்கின்றன. இதனால், பல மீட்டர் துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. முதியோர், பள்ளி மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர். மாநகர பேருந்து கழக அதிகாரிகள் இதை கண்காணித்து, சிட்கோ நகருக்குள் மீண்டும் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் வில்லிவாக்கம் பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் பாதை பணிகளுக்காக ஐ.சி.எப்., பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. இதனால், சிட்கோ நகருக்கு, சிற்றுந்து இயக்கவும் எதிர் பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ