உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துரைப்பாக்கத்தில் குடியிருப்புவாசிகள் குதுாகலம்; களைகட்டியது தினமலர் - கார்னிவல் கொண்டாட்டம்

துரைப்பாக்கத்தில் குடியிருப்புவாசிகள் குதுாகலம்; களைகட்டியது தினமலர் - கார்னிவல் கொண்டாட்டம்

துரைப்பாக்கம்: ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கத்தில் நடந்த 'தினமலர் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சியில் பங்கேற்று, குடியிருப்புவாசிகள் குதுாகலம் அடைந்தனர்.'தினமலர்' நாளிதழ், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, 'கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்கு கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து, சென்னையின் பல்வேறு பிரபல அடுக்குமாடி குடியிருப்புகளில், இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், சென்னை, ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம், விவேகானந்தர் நகரில் உள்ள ஜெயின்ஸ் பெப்பிள் புரூக் குடியிருப்பில், நேற்று மதியம் 2:00 முதல் இரவு 9:00 மணி வரை ‛கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சி களைகட்டியது. குடியிருப்புவாசிகள், தங்கள் சுற்றத்தாருடன் சேர்ந்து குடும்ப நிகழ்வுபோல் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.கோலப்போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மினி மாரத்தான், மேஜிக் ஷோ, ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகளில், சிறுவர் - சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை குதுாகலித்தனர். அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.https://x.com/dinamalarweb/status/1941698889507274988அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், குழந்தைகளுக்கான தனித்திறன் விளையாட்டு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், 1,999 ரூபாய் செலுத்தி 'தினமலர்' நாளிதழ் ஆண்டு சந்தா பெற்ற குடியிருப்புவாசிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை, 'ஹூண்டாய், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜை, நம்ம பேமிலி குரூப்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை