உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆகாயதாமரை அகற்றும் பணி கொரட்டூர் ஏரியில் கண்துடைப்பு பகுதிவாசிகள் குமுறல்

ஆகாயதாமரை அகற்றும் பணி கொரட்டூர் ஏரியில் கண்துடைப்பு பகுதிவாசிகள் குமுறல்

கொரட்டூர்,கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியைச் சேர்ந்த, ஏழு கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏரியில் கழிவுநீர் கலந்து வருவதால், நீர் மாசடைந்து, ஆகாயதாமரை படர்ந்து காணப்படுகிறது.இதனால், ஏரியில் உள்ள மீன் செத்து மிதப்பதுடன், பருவமழை மற்றும் அதற்கு பின் வரும் நாட்களில், ஏரிப்பூச்சிக்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. இதனால், அப்பகுதிவாசிகள் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஏரில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றக்கோரி, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில், ஏரியில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணியை, அவ்வப்போது செய்து வருகின்றனர்.இது குறித்து, அம்பத்துார் மண்டல பொறியாளர் பிரிவு அதிகாரி கூறுகையில், 'மாநகராட்சி பணியாளர்களை வைத்து, ஏரியில் இருந்து தினமும், 10 டன்னுக்கும் மேல், ஆகாயதாமரையை அகற்றி வருகிறோம்' என தெரிவித்தார்.'ஏரி முழுதும், ஆகாய தாமரைகள் படர்ந்துள்ள நிலையில், கண்துடைப்புக்காக சென்னை மாநகராட்சி சார்பில், சிறிய அளவிலான இயந்திரத்தை பயன்படுத்தி, கரையோர பகுதியில் மட்டும், ஆகாய தாமரைகளை அகற்றி வருகின்றனர்' என அப்பகுதிவாசிகள், குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ