மேலும் செய்திகள்
ஏரி ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு துவக்கம்
22-Oct-2024
சென்னை,:ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில், அழகிரி நகர் உள்ளது. இங்குள்ள குடிசை வீடுகளை, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் அடுக்குமாடி வீடுகளாக கட்டிக் கொடுக்க, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது.அதன்படி, 11ம் தேதி வீடுகள் கணக்கெடுக்கும் பணியை, பொறியாளர் ஜேசு ஆண்டனி தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்றுடன், கணக்கெடுப்பு பணி முடிந்தது. இந்த பட்டியலில், அழகிரி நகரில் வசிக்காத சிலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டதை அறிந்த அப்பகுதிவாசிகள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். பின், நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் குவிந்து, நடந்தவற்றை கூறினர். இதற்கு, அழகிரி நகரில் வசிக்காதவர்கள் பெயர் இடம் பெற்று இருந்தால், அவற்றை நீக்கி சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால், கலைந்து சென்றனர். மூன்று நாட்கள் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 319 குடியிருப்புகள் உள்ளது தெரிந்தது.
22-Oct-2024