உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தெருநாய் தொல்லையால் குடியிருப்புவாசிகள் அவதி

தெருநாய் தொல்லையால் குடியிருப்புவாசிகள் அவதி

பாடி,அம்பத்துார் மண்டலம், 88வது வார்டு, பாடி, குமரன் நகர் விரிவாக்கம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள, முல்லை தெரு, பாரதியார் நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், முல்லை தெரு சந்திப்பில், தெருநாய் ஒன்று நேற்று நள்ளிரவு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. காலை வெகுநேரமாகியும், நாயின் உடல் மாநகராட்சி பணியாளர்களால் அப்புறபடுத்தவில்லை என தெரிகிறது.இதனால், நாயின் உடலில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியது. அப்பகுதிமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். பாதசாரிகள், வாகன ஓட்டுகள் மூக்கை பிடித்தபடி சென்றனர்.இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:குமரன் நகர் விரிவாக்கம் பகுதியை சுற்றிலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முல்லை தெருவில் மட்டும், எட்டுக்கும் மேற்பட்ட நாய்கள் உலாவுகின்றன.குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் உள்ள பகுதி என்பதால், பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். இரவில் வாகன ஓட்டிகளை தெருநாய்கள் விரட்டி செல்கிறது. தெருநாய்களை பிடிக்க அம்பத்துார் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ