மேலும் செய்திகள்
மாநில கூடைப்பந்து போட்டி இந்தியன் வங்கி அபாரம்
28-Jun-2025
மாநில கூடைப்பந்து 48 அணிகள் மோதல்
23-Jun-2025
சென்னை:மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டியில், ஆண்களில் இந்தியன் வங்கி, பெண்களில் ரைசிங் ஸ்டார் கிளப் அணிகள், 'சாம்பியன்' பட்டங்களை வென்றன.மேயர் ராதாகிருஷ்ணன் கிளப் சார்பில், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, எழும்பூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கடந்த 21ல் துவங்கி, நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.மின்னொளியில் நடந்த இப்போட்டியில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஜேப்பியார் பல்கலை, லயோலா உள்ளிட்ட ஆண்களில் 34 அணிகள், பெண்களில் 14 அணிகள் பங்கேற்றன. ஆண்களுக்கு 'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையிலும், பெண்களுக்கு 'நாக் அவுட்' முறையிலும், போட்டிகள் நடந்தன.அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் இந்தியன் வங்கி முதலிடத்தையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இரண்டாமிடத்தையும் பிடித்தன. எஸ்.டி.ஏ.டி., மற்றும் தமிழக போலீஸ் அணிகள் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்தன.பெண்களில் ரைசிங் ஸ்டார் கிளப், எஸ்.டி.ஏ.டி., - தமிழக போலீஸ் மற்றும் ஜேப்பியார் கல்லுாரி முதல் நான்கு இடங்களை கைப்பற்றின. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சட்டசபையின் சபாநாயகர் அப்பாவு பரிசுகளை வழங்கினார்.
28-Jun-2025
23-Jun-2025