உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை தொட்டிகளால் விபத்து அபாயம்

குப்பை தொட்டிகளால் விபத்து அபாயம்

ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், எம்.ஜி.ஆர்., சாலை, 9வது தெரு சந்திப்பில் மின்மாற்றியின் கீழ் நான்கு குப்பை தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.இவற்றில் குப்பை நிரம்பி வழிவதால், துர்நாற்றம் ஏற்படுகிறது. மாடுகள், நாய்கள் உணவுக்காக குப்பையை கிளறி சாலையில் தள்ளுவதால், வாகனங்கள் சறுக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தால், குப்பைத்தொட்டி ஓரமாக இருக்கிறது. அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர். மாநகராட்சி உயர் அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரகுபதி, நகர் வாழ் மக்கள், நங்கநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ