மேலும் செய்திகள்
பெண் பர்ஸை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்
16-Sep-2024
ஓட்டேரி, பெரம்பூரைச் சேர்ந்தவர் வேலாயுதம், 26; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் மாலை ஓட்டேரி மங்களாபுரத்தில் இருந்து, வடமாநில இளைஞர்கள் இருவரை ஏற்றி சென்ட்ரல் சென்றார்.வழியில், பெரம்பூர் ஜமாலியா அருகே ஆட்டோவை நிறுத்தியவர், வடமாநிலத்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து 1,000 ரூபாய் பறித்து, பயணியரை அங்கேயே இறக்கி சென்றார்.இது குறித்து, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆட்டோ ஓட்டுனர் வேலாயுதத்தை கைது செய்து, ஆட்டோ மற்றும் ஒன்றரை அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர். பிற மாநிலங்களில் இருந்து வரும் மொழி புரியாதவர்களிடம், சில ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடியாக அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் பணம் பறிப்பில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. இது குறித்து விசாரித்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
16-Sep-2024