50வது முறை சிறை சென்ற ரவுடி
புளியந்தோப்பு, புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடி 50வது முறையாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். புளியந்தோப்பில் கடந்த வாரம் அர்ஜுன் மற்றும் முனுசாமி ஆகியோர் மோதிக் கொண்ட சம்பவத்தில், ஏற்கனவே பரத், 25, என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.பரத்தின் தந்தையான புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த இளம்பரிதி என்கிற டைகர் ராஜாத்தி, 49, என்பவரை, புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.இவர் மீது ஏற்கனவே 49 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது 50வது முறையாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்