உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜாமினில் வந்து கத்தியுடன் திரிந்த ரவுடிக்கு மீண்டும் சிறை

ஜாமினில் வந்து கத்தியுடன் திரிந்த ரவுடிக்கு மீண்டும் சிறை

சென்னை, பகையாளியை தீர்த்துக்கட்ட, கத்தியுடன் திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.ஐ.சி.எப்., பகுதியைச் சேர்ந்த உதயகுமார், 30, என்ற ரவுடி கொல்லப்பட்ட வழக்கில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர், 30, உள்ளிட்ட ஆறு பேரை, வில்லிவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில், அலெக்சாண்டர், சமீபத்தில் ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு கத்தியுடன் சுற்றித்திரிந்த அவரை, ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்தனர்.விசாரணையில், கோயம்பேடில் ஒருவரை கொலை செய்ய வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை