உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜாமினில் வெளிவந்த ரவுடி வழிப்பறி செய்ததால் கம்பி

ஜாமினில் வெளிவந்த ரவுடி வழிப்பறி செய்ததால் கம்பி

திருமங்கலம்:சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ரவுடி, டீக்கடைக்காரரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.அண்ணா நகர் மேற்கு, 18வது பிரதான சாலையை சேர்ந்தவர் கார்த்திக், 40. இவர், அதே பகுதியில், டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி, இவரது கடைக்கு வந்த இரண்டு மர்மநபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, கார்த்திக்கிடம் பணம் கேட்டனர். கார்த்திக் தரமறுத்ததால், கத்தியால் அவரை தாக்கிவிட்டு, 500 ரூபாய் பணத்தை பறித்து தப்பினர்.புகாரின்படி, திருமங்கலம் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன், 25, என்பவரை நேற்று கைது செய்தனர்.இவர் மீது, ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகள் இருப்பதும், 'குண்டர்' தடுப்பு சட்டத்தில் சிறைக்கு சென்று, சமீபத்தில் ஜாமினில் வெளிவந்ததும் தெரிந்தது. கார்த்திக்கை போலீசார் நேற்று மீண்டும் சிறையில் அடைத்து, அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை