போதை பொருள் வழக்கில் ரவுடியின் மனைவி கைது
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, திரு.வி.க., நகரை சேர்ந்தவர் சரவணன், 28; ரவடி. பல்வேறு வழக்குகளில், புளியந்தோப்பு தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் நேற்றுமுன்தினம் இரவு சோதனை செய்தனர்.வீட்டில் இருந்து, அரை கிலோ கஞ்சா, கோடாரி, கத்தி, மூன்று மொபைல்போன்கள், ஒரு எடை மிஷின் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.சரவணனின் மனைவி கலைவாணியை, 30, போதை பொருள் விற்பனை தொடர்பாக, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.