மேலும் செய்திகள்
போக்குவரத்து கழகங்களின் 50 பணிமனை நவீனமயமாக்கம்
17-May-2025
சென்னை, ரயில் இன்ஜின் அழகுப்படுத்தும் போட்டியில், சென்னை ராயபுரம் ரயில் இன்ஜின் பணிமனை முதல் பரிசை பெற்றது.உத்தர பிரதேச மாநிலம், பனாரஸ் இன்ஜின் பணிமனையில், 42வது மின்சார லோகோ பராமரிப்பு ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில், மின்சார ரயில் இன்ஜின்களுக்கான அழகு போட்டி என்று அழைக்கப்படும், 'கேப் மேம்படுத்தல்' போட்டி, கடந்த 23, 24ம் தேதிகளில் நடந்தது. இப்போட்டியில், 16 ரயில்வே மண்டலங்களும், மூன்று ரயில்வே உற்பத்தி ஆலைகளும் பங்கேற்றன. போட்டியில் முதல் பரிசை, தெற்கு ரயில்வேயின் கீழ்வரும், சென்னை ராயபுரம் மின்சார இன்ஜின் பணிமனை வென்றது. தென் மத்திய ரயில்வே கீழ்வரும், தெலுங்கானா மாநிலம் லாலாகுடாவில் உள்ள மின்சார இன்ஜின் பணிமனையுடன் இணைந்து, ராயபுரம் மின்சார இன்ஜின் பணிமனை வெற்றி பெற்றது. இப்பணிமனைகளுக்கு முதல் பரிசை, ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் வி.பி.சிங், ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன், தெற்கு ரயில்வேயின் தலைமை மின் லோகோ பொறியாளர் பாலாஜி ஆகியோர் வழங்கினர்.பரிசை, ராயபுரம் மின்சார ரயில் பணிமனையின் மூத்த கோட்ட மின் பொறியாளர் நாக சீனிவாசு ரோங்கலா; லாலாகுடா எலக்ட்ரிக் லோகோ ஷெட்டின் மூத்த கோட்ட மின் பொறியாளர் ஆர்.சந்தோஷ் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.போட்டியில் அஜ்னி மின்சார இன்ஜின் பணிமனை, கான்பூர் மின்சார இன்ஜின் பணிமனை, விசாகப்பட்டினம் பணிமனை ஆகியவை இணைந்து, இரண்டாவது பரிசை பெற்றன. வதோதரா பணிமனை, ஹூப்ளி பணிமனை, தீன் தயாள் உபாத்யாயா பணிமனை ஆகியவை இணைந்து, மூன்றாம் இடத்தை பிடித்தன. ராயபுரம் மின்சார ரயில் இன்ஜின், பல்வேறு சிறப்பம்சங்களுடன் விரிவாக மேம்படுத்தப்பட்டதால், முதல் பரிசை பெற்றது. ***
17-May-2025