மேலும் செய்திகள்
கஞ்சா பறிமுதல் இளைஞர் கைது
05-Jun-2025
செங்குன்றம் செங்குன்றம், மொண்டியம்மன் நகர் அருகே, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரது பையை சோதனை செய்ததில், கஞ்சா சிக்கியது. விசாரணையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 22, என்பது தெரிய வந்தது.போலீசார், பாலகிருஷ்ணனை கைது செய்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
05-Jun-2025