மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை
14-Jan-2025
கொடுங்கையூர்:சென்னை, மாதவரம், சுந்தரம் நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 44. இவர், கடந்த 15 ஆண்டுகளாக, கொடுங்கையூர், ஹார்பர் காலனி, 2வது தெருவில், வி.எஸ்.வி., என்ற பெயரில், இன்டஸ்ட்ரியல் ஸ்டீல் கம்பெனி நடத்தி வருகிறார்.இவர் வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, 13 லட்ச ரூபாய் பணத்தை, கம்பெனியில் வைத்துள்ளார்.பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 13ம் தேதி, கம்பெனி லாக்கர் மற்றும் வெளி கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார்.நேற்று கம்பெனிக்கு வந்து பார்த்த போது, லாக்கரை உடைத்து, 13 லட்ச ரூபாய் பணத்தில், 11.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
14-Jan-2025