உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1.21 கோடி நுாலகம், வகுப்பறைகள் மேடவாக்கம் அரசு பள்ளியில் திறப்பு

ரூ.1.21 கோடி நுாலகம், வகுப்பறைகள் மேடவாக்கம் அரசு பள்ளியில் திறப்பு

மேடவாக்கம், பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 1.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'மெட்ராஸ் ரவுண்ட் டேபிள்' வாயிலாக, எட்டு வகுப்பறைகள், நுாலகம், ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது.இவற்றை, அமைச்சர்கள் மகேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று காலை திறந்து வைத்தனர். விழாவில், அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''காமராஜர் காலத்திற்குப் பின் பெரிய அளவில் பள்ளிக் கட்டடம் கட்டப்படவில்லை. தற்போது, பேராசிரியர் அன்பழகன் பெயரில் திட்டம் தொடங்கப்பட்டு, 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிட்டு இதுவரை, 7,300 வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன,'' என்றார்.அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்துள்ளது. மொத்தம், 1,800க்கும் மேற்பட்ட மோட்டார்கள் வைத்து, மழைநீர் அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கிறது. ஒரே நாளில் பெருங்குடியில், 8 செமீ., மழை பெய்தது. ஆனால், எந்த இடத்திலும் நீர் தேங்காத வண்ணம், உடனடியாக அகற்றப்பட்டது.கிண்டி 'ரேஸ்கோர்ஸ்' பகுதியில், 160 ஏக்கர் நிலத்தில், நான்கு நீர் நிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. நாராயணபுரம் ஏரியிலிருந்து, 1,000 கன அடி நீர் மட்டுமே வெளியேறும். அதை துணை முதல்வர் ஆய்வு செய்து, கூடுதலான நீர் வெளியேற பாதை கண்டறியப்பட்டது. அந்த ஏரியை பலப்படுத்தும் பணி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை