உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைக்கு ரூ.13.37 கோடி

ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைக்கு ரூ.13.37 கோடி

சென்னை,ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 13.37 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையால் சென்னை மட்டுமின்றி, அருகே உள்ள மாவட்ட மக்களும் பயன் பெற்று வருகின்றனர். இதனால், மகப்பேறு மருத்துவமனையில் படுக்கைகள் எண்ணிக்கை, 610ல் இருந்து 810 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு, கட்டட சீரமைப்பு, மின்சார கருவிகள், மின்துாக்கி உள்ளிட்ட உட்கட்டமைப்புக்கு 11.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனையின் ரத்த மையத்தை மேம்படுத்துவதற்கு, 1.74 கோடி ரூபாய் என, 13.37 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ