மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட 'டுபாக்கூர்' போலீஸ் கைது
23-Oct-2024
முத்தியால்பேட்டை, நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது நபில், 21; கல்லுாரி மாணவர். இவர் கடந்த 21ம் தேதி, புதிய 'பைக்' வாங்க, 1.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, நண்பருடன் மண்ணடி, ராமசாமி தெருவில் நடந்து சென்றார்.அப்போது பைக்கில் வந்த ஐவர், முகமது நபிலை மிரட்டி, 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த தீபன்குமார், 32, ராகேஷ், 26, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 8,000 ரூபாய் பணம், இரண்டு மொபைல்போன்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நேற்று இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
23-Oct-2024