உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2.20 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.2.20 லட்சம் கஞ்சா பறிமுதல்

செங்குன்றம்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே, கஞ்சா விற்பனை நடப்பதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மலர்செல்வி தலைமையில், தனிப்படை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அங்கு, சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, முரண்பாடாக பதிலளித்தார். இதையடுத்து, போலீசார் அவரது பையை சோதனையிட்டனர். இதில், கஞ்சா சிக்கியது. விசாரணையில், அண்ணா நகர், சாந்தி காலனியைச் சேர்ந்த சுருளி என்கிற சிலம்பரசன், 27, என்பதும், ஆந்திராவில் இருந்து, பேருந்து வாயிலாக கஞ்சா கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகரில் வினியோகம் செய்ததும் தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், 2.20 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி