மேலும் செய்திகள்
ரூ.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
21-Sep-2025
வியாசர்பாடி: வியாசர்பாடி, ஏ.ஏ., சாலையில் வியாசர்பாடி போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்தவர்களிடம் இருந்து, 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் நங்கநல்லுாரை சேர்ந்த விஜய் பிரசன்னா, 27, பெரம்பூரைச் சேர்ந்த ஆபிரகாம் ஜோசப், 24, என்பது தெரிய வந்தது. இவர்கள், நேற்று பணத்திற்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிலையில், பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
21-Sep-2025