13 வீரர்களுக்கு ரூ.6 லட்சம் உதவி
சென்னை,தமிழக விளையாட்டு வீரர் - - வீராங்கனையருக்கான பயிற்சி உபகரணங்கள், வெளிநாட்டுக்கு செல்லும்போது ஏற்படும் செலவு தொகை உள்ளிட்டவை வழங்கும் வகையில், தமிழ்நாடு 'சாம்பியன்ஸ்' அறக்கட்டளை செயல்படுகிறது.அந்த வகையில், மலேஷியாவில் நடக்கவுள்ள ஆசிய பசிபிக் காது கேளாதவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர், வீராங்கனையருக்கு 2.20 லட்சம் ரூபாய்க்கான காசோலை, அறக்கட்டளை சார்பில் நேற்று, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.இவர்களுடன், தென் கொரியா மற்றும் எகிப்து நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் இருவர் என, மொத்தம் 13 பேருக்கு 6 லட்சம் ரூபாய்க்கான காசோலை, அறக்கட்டளை நிதியிலிருந்து நேற்று வழங்கப்பட்டது.