உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தங்க நகை தருவதாக ரூ.6 லட்சம் மோசடி

தங்க நகை தருவதாக ரூ.6 லட்சம் மோசடி

வியாசர்பாடி, தங்க நாணயம் வாங்கி தருவதாக, 6.80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 41. தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். அதற்கு தேவையான தங்க நகைகள் வாங்குவதற்காக, அதே பகுதியை சேர்ந்த மகேஷ்வர், எஸ்தர், டேவிட் ஆகிய மூவரிடம், மார்ச், 1ல், 6.80 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.பணம் பெற்ற மூவரும், இதுவரை நகைகள் ஏதும் தராமல் ஏமாற்றினர். இதுகுறித்து, ஜார்ஜ் டவுன், பத்தாவது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.நீதிமன்ற உத்தரவுப்படி, எம்.கே.பி., நகர் போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை