உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் திருட்டு?

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் திருட்டு?

ஓட்டேரி,வீட்டின் பூட்டை உடைத்து எட்டு லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை திருடியோரை, போலீசார் தேடுகின்றனர்.ஓட்டேரி, தாசமகான் பகுதியைச் சேர்ந்தவர் பரிதாபானு, 40. தையல் கடையில் துணி தைக்கும் இவருக்கு திருமணமாகி கல்லுாரியில் படிக்கும் இரு மகள்கள் உள்ளனர்.வேலைக்காக, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி, பரிதாபானு சென்றார். அவரது மகள், கல்லுாரி முடித்து மாலையில் வீட்டிற்கு வந்தபோது கதவின் பூட்டும், பீரோவில் இருந்த லாக்கரும் உடைக்கப்பட்டிருந்தது.லாக்கரில் இருந்த 8 லட்சம் ரூபாய், 1.5 சவரன் நகை திருடுபோயுள்ளதாக, ஓட்டேரி போலீசாரிடம் பரிதாபானு புகார் அளித்தார். கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் விசாரித்த போலீசார், புகார்தாரர் முன் பின் முரணாக பேசுவதுடன் லாக்கரை உடைத்த தடயமும் இல்லாததை அறிந்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை