தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு
சென்னை : தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,280 ரூபாய்க்கும்; சவரன், 58,240 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 107 ரூபாய்க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை, தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 7,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 58,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 109 ரூபாய்க்கு விற்பனையானது.