உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆடிட்டர்கள் சொசைட்டி தலைவராக எஸ்.மோகன் தேர்வு

ஆடிட்டர்கள் சொசைட்டி தலைவராக எஸ்.மோகன் தேர்வு

ஆடிட்டர்கள்சொசைட்டியின் 2024-26 க்கான தலைவராக சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஆடிட்டர் எஸ். மோகன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா முழுவதிலும் கணக்கியல் மற்றும் பட்டம் கணக்காளர்களின் பழமையான அமைப்பாகத் திகழும் சென்னையைச் சேர்ந்த தி சொசைட்டி ஆப் ஆடிட்டர்ஸ் இந்தியாவின் கணக்காளர் நியமன ஆணையம் என்ற கணக்கியல் கட்டுப்பாட்டு அமைப்புக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது.இந்திய கணக்கியல் தொழில் துறையில் இங்கு புகழ்பெற்ற பல முக்கியமான நபர்கள், இந்த அமைப்பை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், அதை வளர்த்துப் பாதுகாப்பதிலும் உறுதியாகக் கவனம் செலுத்தினர். இந்த அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் உருவாக, வளர, பிரபலமடைய ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தது. இத்தகைய அமைப்பு தான் 1949ஆம் ஆண்டில் பாராளுமன்ற சட்டத்தின் கீழ் இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்ட் நிறுவனத்தை ( உருவாக்குவதற்காக இந்திய அரசை ஒரு வலியுறுத்தும் சக்தியாக இருந்தது. தற்போது புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ் மோகன் சென்னை ஆழ்வார்பேட்டை சேர்ந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை