மேலும் செய்திகள்
ரூ.45 லட்சம் மோசடி: பலே நபர் சிக்கினார்
23-Sep-2024
ஆவடி, மாங்காடு, சிவந்தங்கள், சுப்ரமணிய நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 43. இவர், 22 ஆண்டுகளாக, ஆன்லைன் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு, யுவராஜ், முரளி மற்றும் ராஜு என்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள், சாந்தியின் நிறுவனத்தில் வேலைக்கு பதிவு செய்தோருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 50 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதை அறிந்த, சேலம், ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த தயாநிதி, 35 என்பவரும், தனக்கு எல்லா அரசு துறைகளிலும் தெரிந்த நபர்கள் இருப்பதாக கூறி உள்ளார். மேலும், போலியான அரசு முத்திரை பதித்து, 18 பேருக்கு போலியான பணி நியமன ஆணை தயார் செய்து காண்பித்துள்ளார். அதை உண்மை என நம்பிய சாந்தி, 18 பேரிடம் 98 லட்சம் ரூபாயை பெற்று, தயாநிதியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். பின், வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து, கடந்த ஜூலை 16ல் ஆவடி மத்திய குற்றப்பிரிவில், சாந்தி புகார் அளித்தார். புகாரின் படி, வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த தயாநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
23-Sep-2024