மேலும் செய்திகள்
தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'
30-Sep-2025
சென்னை: வி.ஐ.டி., போபால் பல்கலையில், 'சன்ஸ்கிருதி சமாகம்' கலாசார விழா கோலாகலமாக நடந்தது. மத்திய பிரதேசத்தில் உள்ள வி.ஐ.டி., போபால் பல்கலை வளாகத்தில், 'சன்ஸ்கிருதி சமாகம்' எனும் கலாசார விழா நடந்தது. வி.ஐ.டி., நிறுவனர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடந்த இந்த விழாவில், துணை தலைவர் சங்கர் விசுவநாதன், அறக்கட்டளை உறுப்பினர் ரமணி பாலசுந்தரம், புதுமணத் தம்பதிகளான வி.ஐ.டி., உதவி துறை தலைவர் காதம்பரி விசுவநாதன், டாக்டர் ஸ்ரவண் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர். நாடு முழுதும் இருந்து பல்வேறு அரசியல் மற்றும் கல்வித்துறை பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவில், புகழ் பெற்ற கலைஞர்கள் பத்ம விபூஷண் சோனல் மான்சிங், ஜாசுகான், அனன்யா சக்ரவர்த்தி மற்றும் வர்ஷிணி சங்கர் ஆகியோரின் இந்திய பண்பாட்டை மெய்மறக்க செய்யும் கலை நிகழ்ச்சி நடந்தது. மாலையில், வண்ணமயமான 'ட்ரோன்' காட்சி நடந்தது. இதில், பிரதமர் மோடி உருவம், மத்திய பிரதேசத்தின் முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் உருவம், மாநிலத்தின் ஆட்சி, வேலை வாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி ஆகியவை குறித்து 'ட்ரோன்' காட்சிப்படுத்தின. மேலும், போபால் கல்வி துறையில் வி.ஐ.டி.,யின் முக்கிய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது. சன்ஸ்கிருதி சமாகம், மத்திய பிரதேசத்திற்கான ஒரு பண்பாட்டு மைல்கல் நிகழ்வாக அமைந்தது.
30-Sep-2025