மேலும் செய்திகள்
'தேசிய தலைவர்' படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு
12-Oct-2025
சென்னை: புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாளை ஒட்டி, அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அனந்தா திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா, ராயப்பேட்டை, தி மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. வரும் 23ம் தேதி வெளியாக உள்ள, இப்படம் குறித்து பாடலாசிரியர் பா.விஜய் பேசுகையில், '' அனந்தா , திரை படைப்பு என்பதைவிட, இறை படைப்பு எனலாம். ''இதற்கு முன், இறை சார்ந்த பாடல்கள் நிறைய எழுதியுள்ளேன். ஆனால் முதல் முறையாக இறைவனுக்கே பாடல் எழுதிய அனுபவம் இந்த படத்தில் தான் கிடைத்தது,'' என்றார். படம் குறித்து, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரத்னாகர் பேசியதாவது: பாபாவிற்கு, சீனாவில் சாய் மந்திராலயம் எழுப்பப்பட்டுள்ளது. அங்கு, 10 - 12 அடி உயரத்தில் அவரது உருவப்படம் நிறுவப்பட்டுள்ளது. அது போல் தமிழக பக்தர்களால், உருவானது தான் அனந்தா திரைப்படம். சாய்பாபாவின் 100வது பிறந்த நாளன்று இப்படம் வெளியிடுவது கூடுதல் சிறப்பு. அனந்தா திரைப்படம் கமர்ஷியல் சார்ந்த விஷயமல்ல, இது ஒரு பக்தி சார்ந்த அனுபவம். ஒவ்வொரு சாய் பக்தருக்கும் இந்த படத்தைக் காணும்போது மனமுருகுவர். இவ்வாறு அவர் கூறினார். அனந்தா படம், யதார்த்தம், உணர்ச்சி, தெய்வீக ஆற்றல் உட்பட ஐந்து கதைகளை சேர்த்து ஒரே படமாக எடுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்; தேவா இசை அமைத்துள்ளார்.
12-Oct-2025